HISTORY

Everything in this world happens by the grace of the Lord. In this line the life of the Siddhar is a proof that there is a Lord in this world. Thus our Aiya Sakta Sri Sarkuru is the one who came to this world to serve spiritually in the way of the Srinivasa Siddhar. This article describes the history of the temples of Sri Pratiyangiradevi Kalabhairavar, the life history of Aiya and the miracles that people achieved through this temple. Siddhar Ayya was born in Thiruvananthapuram, Kerala and his parents name Gurusamy Rajammal. He has been following the spiritual journey with his father since he was five years old. Siddhar Aiya, who was deeply involved in spirituality, gradually realized the grace and glory of God through the service he rendered to his father, and even abandoned his schooling, conquered spiritual wisdom and mastered the study of the Siddhas' life texts, the Vedas, the seals, the Ashtotras, and many more. He has a habit of doing deep meditation while going to the temple. With his father as his guru, he understood the life wisdom of the Siddhars and lived their way like the Siddhars. He worked full time in spirituality, yoga, social reform and helping people. Srinivasa Siddhar, a devotee of Goddess Pratiyangira, went to Kasi, the birthplace of Kalabhairavar, at an early age and stayed there as a spiritual devotee. Srinivasa Siddhar performed penance on the holy river Ganges for the grace of Kalabhairava and Prathiyangiradevi. At a young age, he traveled to spiritual shrines such as Kasi, Gaya, Pathrinath, Dwarka, Kailayam and the Himalayas. He saw many Siddhas there and received their blessings. One day Srinivasa Siddhar, who was meditating on the Kailaya hill, received the enlightenment of the Lord, and by the order of that miraculous light, he came up with the idea of setting up a grand temple in Thoothukudi, also known as Thirumanthiranagar by spiritual.

Accordingly, in the year 1993, in Thoothukudi, Pratiyangiradevi set up a small temple for Kalabhairavar and started worshiping it. He desire to build the most magnificent temple for Pratiyangiradevi and Kalabhairavar , his feet remained buried in his mind, and the day came when his wish would come true. Mother Prithviyangira Devi appeared in her dream and the time has soon come for you to build a temple for me. I will show you the place myself. There will be one huge pond on the way you are looking to set up the temple. In front of it, build a temple for me. The way to go in search of a place for the goddess to hear the mother's voice was automatically visible. As the goddess said, a large pond appeared. While Siddhar Aiya was worshiping the place where the serpent appeared with, the mother's voice sounded like you would show me the most magnificent temple as you wished. On the site of the temple is the tomb of Siddhar who lived many years ago. Thus the place has become sacred. At this time the owner of the place voluntarily asked to buy the place. Realizing that this was also the miracle of the Goddess, the Swamis bought the place and built the temple in the architectural design of the state of Kerala, just as they had thought of the wise Pratyangira Devi and the Kala Bhairavar. The tower of the temple is surrounded by sculptures of deities like Kundalidevi, Sri Chinnamastha, Daradevi, Tripurabhairavi, Pagalamuki Rajamatangi Sri Vidya. In the sanctum sanctorum of the temple, the 11-foot-tall single stone Pratiyankiradevi, Kalabhairavar idols are installed and the devotees are thrilled to see the pujas taking place.

இவ்வுலகில் எல்லாம் இறைவன் அருளாலே நிகழ்கிறது. இந்த வரிசையில் இவ்வுலகில் இறைவன் உள்ளான் என்பதற்கு சான்றாக சித்தர்களின் வாழ்வு அமைந்துள்ளது. அவ்வாறாக சித்தர்களின் வழியில் இவ்வுலகிற்கு ஆன்மிக பணியாற்ற வந்தவர்தான் நமது ஐயா சாக்த ஸ்ரீ சர்குரு. சீனிவாச சித்தர் அவர்கள். இக்கட்டுரையில் ஸ்ரீ பிரத்தியங்கிராதேவி காலபைரவர் ஆலயங்கள் தோன்றிய வரலாறும் , ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறும் , இவ்வாலயத்தின் வாயிலாக மக்கள் அடைந்த அற்புதங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது சித்தர் ஐயா அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குருசாமி ராஜம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். தனது ஐந்து வயதிலிருந்தே தந்தையின் ஆன்மிக பயணத்திற்கு துணையாக இருந்தார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சித்தர் ஐயா அவர்கள் தனது தந்தைக்கு ஆற்றிய தொண்டின் மூலமாக கடவுளின் அருளையும் , மகிமையையும் படிப்படியாக உணர்ந்து , தனது பள்ளிப் படிப்பை கூட துறந்து , ஆன்மிக ஞானம் வென்று , சித்தர்களின் வாழ்க்கை நூல்கள் , வேதங்கள் முத்திரைகள் , அஷ்டோத்திரங்கள் , போன்ற பல வகையான நூல்கள் கற்று தேர்ச்சி பெற்றார். ஆலயத்திற்கு செல்லும் போது ஆழ்ந்த தியானம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது தந்தையையே குருவாக கொண்ட அவர் சித்தர்களின் வாழ்வு ஞானத்தை புரிந்து கொண்டு அவர்கள் வழியிலேயே சித்தர் போல வாழ்ந்து வந்தார் முழுநேரமும் ஆன்மிகம் , யோகம் , சமூக சீர்திருத்தம் , மக்களுக்கு உதவுதல் போன்ற பணிகள் செய்துவந்தார். பிரத்தியங்கிரா தேவி , காலபைரவர் மீது தீராத பற்று கொண்ட சீனிவாச சித்தர் அவர்கள் , காலபைரவரின் பிறப்பிடமான காசிக்கு சிறுவயதிலேயே சென்று , அங்கேயே தங்கி ஆன்மிக தொண்டாற்றினார். பிராத்தியங்கிராதேவி காலபைரவரின் அருள் வேண்டி புண்ணிய நதியாம் கங்கை நதியில் தவம் மேற்கொண்டார் , பல மாதம் , பல வருடங்கள் உருண்டோடி தவத்தின் மூலமாக காசியின் மூலவரான காலபைரவரின் பூரண அருளப்பெற்றார். காசி , கயா , பத்திரிநாத் , துவாரகா , கைலாயம் , இமயமலை போன்ற ஆன்மிக புனித தலங்களுக்கு இளம் வயதிலேயே பயணம் மேற்கொண்டார் அங்கே பல சித்தர்களையும் கண்டு அவர்களின் , அருளையும் ஆசிகளையும் பெற்றுள்ளார் இந்த வரிசையில் அருள் ஒளி சித்தரான் சக்கரபாணி சுவாமிகளை சந்தித்து அவரது ஆசியை பெற்று அவரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். ஒருநாள் கைலாய மலையில் தியானத்தில் இருந்த சீனிவாச சித்தருக்கு , இறைவனின் ஞான ஒளி கிட்டியது , அந்த அற்புத ஒளியின் உத்தரவால் , ஆன்மிக அற்புதங்களால் திருமந்திரநகர் என்றும் அடைமொழி பெற்ற தூத்துக்குடியில் பிரமாண்ட வடிவில் ஆலயம் அமைக்க மனதில் எண்ணம் உருவாகியது.

அதன்படி கடந்த 1993 ஆண்டு திருமந்திரநகரான தூத்துக்குடியில் , பிராத்தியங்கிராதேவி , காலபைரவாருக்கும் சிறிய வடிவில் ஆலயம் அமைத்து வழிபாடுகளை துவங்கினார். இருந்த போதிலும் தனது அன்னைக்கும் காலபைரவாருக்கும் , மிக பிரமாண்டமான ஆலயம் அமைக்க வேண்டும் என்ற ஆசை , தனது அடி மனதில் புதைந்து கொண்டே இருந்தது , அவரது ஆசை நிறைவேறும் நாளும் வந்தது. அன்னை பிரத்தியங்கிரா தேவி அவரது கனவில் தோன்றி நீ எனக்கு ஆலயம் அமைக்கும் நேரம் வெகுவிரைவில் வந்துவிட்டது. அந்த இடத்தை நானே உனக்கு காட்டுகிறேன். நீ ஆலயம் அமைப்பதற்காக தேடிச் செல்லும் வழியில் மிகப்பெரிய குளம் ஒன்று இருக்கும். அதன் எதிரில் தான் எனக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என அருள் வாக்கு கூறி அன்னை மறைந்தார். அன்னையின் வாக்கு காதில் ஒலிக்க தேவிக்கு இடம் தேடி செல்ல வழி தானாகவே புலப்பட்டது. தேவி கூறியது போன்றே ஒரு பெரிய குளம் தென்பட்டது அதை கடந்த வேளையில் அப்பகுதியில் இருந்த காலி இடத்தில் திடீரென்று ஒரு நாகம் தோன்றி படம் எடுத்து ஆடி மறைந்தது. சித்தர் ஐயா அவர்கள் மெய் சிலிரித்து நாகம் தோன்றிய இடத்தை வணங்கிய வேளையில் நீ விரும்பிய படியே மிகப் பிரமாண்டமான ஆலயத்தை எனக்கு காட்டுவாய் என அன்னையின்அசரீரி ஒலித்தது. ஆலயம் அமைந்துள்ள இடத்தில பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்களின் ஜீவசமாதி உள்ளது. இதனால் அந்த இடம் புனிதத்தன்மை பெற்றுள்ளது.இந்த நேரத்தில் அந்த இடத்தின் உரிமையாளர் தானகவே முன்வந்து அந்த இடத்தினை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். இதுவும் தேவியின் அற்புதம் தான் என உணர்ந்த சுவாமிகள் அந்த இடத்தை வாங்கி தான் ஞானத்தால் உணர்ந்த பிரத்தியங்கிரா தேவிக்கும் கால பைரவருக்கும் தாம் நினைத்தது போலவே கேரள மாநில கட்டிட வடிவமைப்பில் ஆலயத்தை அமைத்தார். இந்த ஆலய கோபுரத்தை சுற்றிலும் , குண்டலிதேவி , ஸ்ரீ சின்னமஸ்தா , தாராதேவி , திரிபுரபைரவி , பகளாமுகி ராஜமாதங்கி ஸ்ரீ வித்யா போன்ற பெண் தெய்வங்களின் தனிச்சிற்பங்களும் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன , ஆலயத்தின் கருவறையில் 11 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன பிராத்தியங்கிராதேவி ,காலபைரவர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடப்பதை பார்க்கும் போது மெய் சிலிர்க்கும்.

kalabairavar temple, kalabairava temple, kalabhairavar temple, kala bairavar kovil, kala bairava kovil, kala bhairavar kovil, kala bairavar temple, kala bhairavar temple, kalabairavar kovil
kalabairavar temple, kalabairava temple, kalabhairavar temple, kala bairavar kovil, kala bairava kovil, kala bhairavar kovil, kala bairavar temple, kala bhairavar temple, kalabairavar kovil

 Stay Connected :

|

  sitharsri@gmail.com

  |

  Ayyanadaippu, NHService Rd, Thoothukudi.

Visitor's Count : Visitor's Count

 Copyright ©2020 Design & Developed by Zeronecorps